Pages

Wednesday, November 21, 2018

காதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கி



காதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நல்நெறிக்கு உய்ப்பது வேதநான் கினும் மெய்பொருள் ஆவது நாதன் நாமம் நமச்சிவாயமே!

ஓம் நமசிவாய


சிவாயம் என்ற அட்சரம் சிவனிருக்கும் அட்சரம் -சிவவாக்கியம்




சிவ சிவ என்கிலர் தீவினையாளர் சிவ சிவ என்றிட தீவினை மாளும் சிவ சிவ என்றிட தேவரும் ஆவர் சிவ சிவ எனச்சிவகதி தானே

தென்னாடுடைய சிவனே போற்றி ! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !


இடரினுந் தளரினும் எனதுறுநோய் - பாடல் வரிகளுடன்


திருஞானசம்பந்தர் மூன்றாம் திருமுறை திருஆவடுதுறை பாடல் - 1 இடரினுந் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள்

தோடுடைய செவியன் விடையேறியோர் - பாடல் வரிகளுடன்



திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் - முதல் திருமுறை - திருப்பிரமபுரம் தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக் காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன் ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. பாடல் - 1 அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர் மேய பெருநெறியபிர மாபுரம்மேவிய பெம்மானிவன் றன்னை ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்உரை செய்த திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்தல்எளி தாமே.