Pages

Wednesday, November 21, 2018

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு - பாடல் வரிகளுடன்



திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் அருளிய பதிகம் - இரண்டாம் திருமுறை திருநீற்றுப்பதிகம் மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே. பாடல் - 1 வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு சீதப் புனல்வயல் சூழ்ந்த திருவால வாயான் திருநீறே. பாடல் - 2 ஆற்ற லடல்விடை யேறு மால வாயான்றிரு நீற்றைப் போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன் தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச் சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே. பாடல் - 11

No comments:

Post a Comment